
நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
“நாட்டின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு மோதல்கள் ஏற்படாதவாறு அனைவரும் செயற்பட வேண்டும். அப்பாவிகளான முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம்.
இதனால் எமது நாட்டிற்கு வரக் கூடிய அவதூறுகளை நினைவில் கொண்டு அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும்.
நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் மற்றும் இவற்றினால் ஏற்பட கூடிய விளைவுகளை கருத்திற் கொண்டு. அரசியல்வாதிகள் பொதுமக்களை அமைதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும்“ என வலியுறுத்தியுள்ளார்.
