கதிர்காம யாத்திரிகள் பலர் தமது நேர்த்திக் கடனை செலுத்தும் முகமாக கதிர்காமம் நோக்கி பாத யாத்திரை செல்லும் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் மட்டக்களப்பு, வழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து தமது பாதயாத்திரையை நேற்று (வியாழக்கிழமை) காலை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த யாத்திரை குழுவானது வேல்சாமி துரைச்சாமி தலைமையில் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த 16ஆம் திகதி தங்களது யாத்திரையினை ஆரம்பித்தது. இந்நிலையில் ஜூலை முதலாம் திகதி கதிர்காமத்தினை சென்றடையவுள்ளதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி கதிர்காம ஆலயத்தின் கொடியேற்றம் ஆரம்பித்து 16ஆம் திகதி ஆடிப் பூரணை தினமன்று தீர்தோற்சவத்துடன் ஆலய மகோற்சவம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






