LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, May 23, 2019

பிரதமர் மே-யின் புதிய ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கத்தக்கது : ஐரிஷ் பிரதமர்

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் அயர்லாந்தால் ஏற்கக்கூடியதாக அமைந்துள்ளதாக ஐரிஷ் பிரதமர் லியோ வராத்கர் தெரிவித்துள்ளார்.

மூன்றுமுறை பிரித்தானிய பாராளுமன்றத்தால் தோற்கடிக்கப்பட்ட பிரதமர் மே-யின் ஒப்பந்தம் நான்காவது முறையாக ஜூன் மாத ஆரம்பத்தில் மீண்டும் பாராளுமன்ற வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.

எதிர்க்கட்சியினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் ஆதரவைப் பெறுவதற்காக மாற்றங்களுடன் கூடிய புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை நேற்றையதினம் பிரதமர் வெளியிட்டார்.

பிரதமர் மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐரிஷ் எல்லை தொடர்பான கொள்கையை உள்ளடக்கிய புதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் தம்மால் ஏற்றுக்கொள்ளக்கூடியது என ஐரிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7