வடக்கு எட்மண்டன் டவுண்ரவுனில் பகுதியில் கொலை செய்யப்பட்டவர், குத்து காயங்களுக்கு உட்பட்டே கொலை செய்யப்பட்டார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.அத்தோடு கொலை செய்யப்பட்டவர், 26 வயதான கெய்ட்லின் ஹூலே என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.
இந்த கொலையில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், இக்கொலை தொடர்பிலான விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை, 101ஆவது வீதி மற்றும் 118ஆவது அவென்யூ பகுதியில் காலை 10.20 மணியளவில் குறித்த ஆண் படுகாயங்களுடன் இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.





