LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 20, 2019

ஜனாதிபதி தேர்தல் வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி – மஹிந்த தேசப்பிரிய

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இந்த வருட இறுதியில் நடத்தப்படுவது உறுதி என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 7 ஆம் திகதிக்குள் நடத்தப்படும் என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  “அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

மேலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் சட்டமன்றம், நிறைவேற்று அதிகாரி அல்லது அரசாங்கத்திடம் ஆலோசனை பெறவேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையதிற்கு இல்லை. அந்தவகையில் ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த தேர்தல்கள் ஆணையம் எதிர்பார்த்துள்ளது.

மேலும் தேர்தல் நடைபெறும் தினம் மற்றும் தேர்தல் பிரசாரத்தின் காலம் ஆகியவற்றை ஒக்டோபர் நடுப்பகுதியில் அறிவிக்கப்படும். ஆனால்  ஜனாதிபதி தேர்தலை அரச விடுமுறை தினத்தில் நடத்த முடியாது” என்றும் கூறியுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7