தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி முடிவடைவதை அடுத்து, சமீபத்தில் கூடிய நடிகர் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து நடிகர் சங்க தேர்தல் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அடுத்த மாதம் 23ஆம் திகதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி ஆகியோர் மீண்டும் போட்டியிடவுள்ளனர். ஏனைய பதவிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் நடிகர் சங்கக் கட்டட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஆறு மாதங்களுக்கு தள்ளி வைத்தனர்.
ஆறு மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்க நிர்வாகிகள் தேர்தல் மூலம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றமை குறிப்பித்தக்கது.





