ஜூன் 27ஆம் திகதி வரை நீட்டித்து லண்டன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) நிரவ் மோடி லண்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை ஜூன் 27ஆம் திகதிவரை நீடித்ததுடன் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூலை 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அத்துடன், நிரவ் மோடி இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என்ற தகவலை இந்திய அரசு 14 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார்.
மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி (இந்திய ரூபாய்) கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பியோடினர்.
லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டன் பொலிஸார் கைது செய்தனர். இதையடுத்து அவரது பிணை மனுவும் 3 தடவை நிராகரிக்கப்பட்டது. அவரது சிறைக்காவலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் நீதிமன்றில் வழக்கு நடைபெறுகிறது. நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்துவருவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று விசாரரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிமன்றம் தடுப்புக்காவலை நீடித்து விசாரணையை ஒத்திவைத்தது.






