LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 20, 2019

5 வருடங்களுக்கு மேல் ஒருநாள் கூடுதலாக மைத்திரியால் ஜனாதிபதியாக இருக்க முடியாது – பீரிஸ்

5 வருடங்களுக்கு மேல் ஒருநாள் கூடுதலாக ஜனாதிபதியால் பதவி வகிக்க முடியாது என்பதை ஜனாதிபதி உட்பட சுதந்திர கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கறுத்தது தெரிவிக்கையில், “வருட இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளது.

ஜனாதிபதியின் மைத்திரிபால சிறிசேன அடுத்த ஆண்டு 07 ஆம் மாதம் 21 ஆம் திகதி வரையில் ஜனாதிபதி பதவி வகிக்க முடியுமா என்று புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட்டதும் சட்ட வியாக்கியானம் கோரவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கடந்த மாதம் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலம் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கமைய 5 வருடமா, அல்லது 6 வருடமா என்று நீதிமன்றத்தில் வியாக்கியானம் கோரினார்.

இதற்கு 5 நீதியரசர்கள் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைய ஜனாதிபதியின் பதவி காலம் 5 வருடங்கள் என்று தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் மீண்டும் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் சுதந்திர கட்சியினர் பிரச்சினைகளை ஏற்படுத்தி நீதிமன்றத்தை நாடுவார்களாயின் அதனையும் முழுமையான எதிர்கொள்ள தயார்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை மழுங்கடிக்கும் செயற்பாடல்ல. இந்த இரு பிரேரணைகள் தொடர்பாக சநபாயகர் கரு ஜயசூரியவே திகதியை அறிவிக்க வேண்டும்” என கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7