ர் சைக்கிளினால் மோதுண்ட நான்கு வயதுச் சிறுவன் ஒருவர் உயிருக்குப் போராடிவரும் நிலையில், சம்பவம் தொடர்பாக 31 வயது ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விக்ரோரியா பார்க் அவென்யூ மற்றும் அடைய்ர் வீதிப் பகுதியில் தனது குடும்பத்தாருடன் நடந்து சென்று கொண்டிருந்த றாடியுல் செளத்ரி எனப்படும் அந்தச் சிறுவன் மீது மோதிய மோட்டர் சைக்கிளின் சாரதி சம்பவ இடத்தில் நிற்காது தப்பிச் சென்றுள்ளார்.
விபத்தினை அடுத்து மோட்டர் சைக்கிளில் சாரதியுடன் பயணித்த பெண் ஒருவர் மோட்டர் சைக்கிளில் இருந்து இறங்கி கால்நடையாக அங்கிருந்து தப்பிச் சென்றநிலையில், அதனைத் தொடர்ந்து மோட்டர் சைக்கிள் சாரதியும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் விசாரணைகளை முன்னெடுத்துவந்த ரொறன்ரோ பொலிஸார் பிற்பகல் 31 வயது ஆண் ஒருவரைக் கைது செய்து, அவர் மீது 3 குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை விபத்தின் போது உடலின் மேற்பகுதியிலும் தலையிலும் பாரதூரமான காயங்களுக்குள்ளான குறித்த அந்தச் சிறுவன், தொடர்ந்தும் தீவிர கண்காணிப்பு பிரிவில் உயிராபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சிறுவனுக்கு இன்னமும் நினைவு திரும்பவிலலை என்றும் கூறப்படும் நிலையில், அவர் உயிர் பிழைத்துவிடுவார் என்று குடும்பத்தினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.






