அதன்படி, அரவகுறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் 63 பேரும், ஒட்டப்பிடாரத்தில் 15 பேரும், சூலூர் தொகுதியில் 22 பேரும், திருப்பரங்குன்றத்தில் 37 பேரும் போட்டியிடுகின்றனர் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் இன்று மாலை ஒதுக்கப்படுகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே சின்னத்தைக் கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் அவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 19ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தொகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அ.ம.மு.க. பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் ஆகியோர் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியான நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.