குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகத்தின் இரண்டாம் மாடி கட்டடத்திலேயே இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த கட்டடத்தின் தளத்தில் குழந்தைகளுக்கு வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததனர்.
இந்நிலையில், பரவி வரும் தீயை அணைக்க 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
இதேவேளை, சூரத் நகரில் தீ விபத்தில் சிக்கி பலியானோருக்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.





