மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிலோ கேரள கஞ்சாவை பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மர்மமான பொதியொன்று இருப்பதை அவதானித்த அப்பிரதேச மக்கள், அவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டதுடன் பொதிக்குள் கஞ்சா இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பின்னர் கஞ்சா தொகுதியினை மீட்ட பொலிஸார், அவை படகின் ஊடாக கொண்டுவரப்பட்டு, விற்பனைக்காக மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதிகளுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்த சந்தேகநபர்கள் யார் என்பது தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.