எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப்போவதாகவும் அதற்கான முயற்சிகளே இடம்பெற்றுவருவதாகவும் சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.
அதன் ஓர் அங்கமாக லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பாக கோட்டாவிற்கு எதிராக அமெரிக்காவில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும் சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அத்தோடு இந்த விவகாரம் அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த லசந்த விக்ரமதுங்கவின் சகோதரரான லால் விக்ரமதுங்க இது பற்றி வெளியான செய்திகளை முழுமையாக மறுத்துள்ளார்.
அத்தோடு அமெரிக்க நீதிமன்றத்தில் இதுபற்றி எந்தவொரு வழங்குகளையும் தாக்கல் செய்யும் திட்டம் இல்லை தமக்கு இருக்கவில்லை என தெரிவித்த அவர், கொலைக்குப் பொறுப்பானவர்கள் மீது இலங்கையில் உள்ள நீதிமன்றங்கள் என்ன நடவடிக்கையை எடுக்கபோகின்றன என்ற முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.