போதைப்பொருட்கள் சார்ந்த எதிர்பார்ப்புக்களை மாற்றும் மாதிரியான
பாடசாலை மாணவர்களுக்கான விரிவுரைகள்  மட்டக்களப்பில்
முன்னேடுக்கப்பட்டது
 
ஜனதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயல் திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு
தேசிய வேலைத்திட்டம் தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள்
ஒழிப்பு விழிப்புணர்வு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது . 
இதன்கீழ் பொலிஸ் திணைக்களத்தின் 
ஊடாக பாடசாலை மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு செயல்திட்டங்கள்  நடைமுறைப படுத்தப்பட்டு வருகின்றன .
இதற்கு அமைய  கிழக்குமாகாண
சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  எச் .டி
.கே .எஸ் கபில  ஜயசேகர ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு
மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம் என் எஸ் .மென்டிஸ்  தலைமையில் மட்டக்களப்பு
கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு  வின்சென்ட்
மகளிர் தேசிய பாடசாலையில் போதைப்பொருட்கள் சார்ந்த எதிர்பார்ப்புக்களை மாற்றும்
மாதிரியான பாடசாலை மாணவர்களுக்கான விரிவு  இன்று
முன்னெடுக்கப்பட்டது 
பாடசாலை போதைப்பொருட்கள் சார்ந்த எதிர்பார்ப்புக்களை மாற்றும் மாதிரியான
பாடசாலை மாணவர்களுக்கான விரிவுரைகளை  கொழும்பு
தலைமை பொலிஸ் போதைப்பொருள் அலுவலக உத்தியோகத்தர்  வி .விஜயராஜ்  வழங்கினார் 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட
பொலிஸ் திணைக்கள பொலிஸ்  அத்தியட்சகர்கள் ,
பொலிஸ் உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் ,
கல்வித்திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்
                 

 



