குறித்த சம்பவத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சந்துரு என்பவரையே பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.
செய்யப்போவதாக தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டறைக்கு தொலைப்பேசியில் அழைப்பை ஏற்படுத்திய சந்தேகநபர், இலங்கையிலும் கோவையைப் போன்று குண்டு வெடிக்குமென்றும் முதலமைச்சரை கொடைக்கானல் வைத்து கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்து விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
குறித்த சம்பவத்தினை தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சந்தேகநபர் குறித்து தீவிர விசாரணையில் திண்டுக்கல் பொலிஸார் ஈடுபட்டனர்.
இதன்போது சென்னை பொலிஸார் கொடுத்த தகவலுக்கமைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணையை நடத்தி வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.