ஊறுபொக்க பிரதேசத்தில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஊறுபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த,ஆரியதாஸ சேனாநாயக்க (72 வயது) எனும் நபரே நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊறுபொக்க, பட்டஹேன பிரதேசத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. குறித்த நபர், அவரது மகனுடன் கருவா உரித்துக்கொண்டபோது மின்னல் தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அயலவர்வர்கள் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்தையடுத்து அங்குள்ள சில வீடுகளின் மின் இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் ஊறுபொக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





