வாழைச்சேனை கறுவாக்கேணி ஆலகண்டிப் பிள்ளையார் சிவன் ஆலய மகா கும்பாபிஷேகத்தின் பாற்குட பவனியும் 1008 சங்காபிஷேகமும் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கடந்த 11ம் திகதி எண்ணெய்க்காப்பு, 12ம் திகதி கும்பாபிஸேகம் பூசைகள் இடம்பெற்றதுடன், தொடர்ந்து 15 நாட்கள் மண்டாலாபிஸேக பூசைகள் இடம்பெற்று வெள்ளிக்கிழமை பாற்குட பவனியும் 1008 சங்காபிஷேகமும் இடம்பெற்றது.
கொண்டையன்கேணி பிள்ளையார் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று அங்கிருந்து ஆரம்பமான பாற்குட பவனியானது கொண்டையன்கேணி வீதி, கறுவாக்கேணி பாடசாலை வீதி, மாரியம்மன் ஆலய வீதி, கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.
இப்பாற்குட பவனியில் ஆண் மற்றும் பெண்கள் எனப் பலர் தங்களுடைய தலையில் பால்குடமேந்தி கலந்து கொண்டதுடன், ஆலயத்தில் சங்காபிஸேக பூசைகள், பாலாபிஷேக பூசைகள், யாக பூசைகள் என்பன இடம்பெற்றது.
ஆலயத்தின் கும்பாபிஸேகம் மற்றும் சங்காபிஷேக பூசைகள் யாவும் பிரதிஸ்ட்டா பிரதம குரு பிரம்மஸ்ரீ சுந்தர செந்தில் ராஜ சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.