கடந்த வாரம் மத்திய அரசாங்கம் மதுபானங்கள் மீது மாகாணங்களுக்கிடையில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றினை வெளியிட்டது.
குறித்த சட்டத்தை தாங்கள் வரவேற்பதாக பிரிட்டிஷ் கொலம்பிய சட்டமா அதிபர் டேவிட் எபி தெரிவித்துள்ளார்.
மேலும் இது பிரிட்டிஷ் கொலம்பியர்களுக்கு நன்மை தரும் என்றும் நாட்டிலுள்ள உற்பத்திகளின் இலவச பரிவர்த்தனைக்கான வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.