கடுமையான உறைபனி மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று(செவ்வாய்கிழமை) இரவு வீசிய கடுமையான சூறைக்காற்று, குறித்த பிராந்தியத்தில் மரக்கிளைகளை முறித்து வீழ்த்தியதில், பலஇடங்களில் மின் வடங்கள் அறுந்து போனதாகவும் இதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சுமார் இரண்டு இலட்சத்து 75 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இந்த சூறைக் காற்றினால், Laval, Lanaudiere மற்றும் Laurentians பிராந்தியங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், Laval பகுதியில் மின் தடையினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.