கொண்டு, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்ஸி பெலோசி அயர்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் விஜயம் செய்யவுள்ள அவர், அயர்லாந்து பிரதமர் லியோ வரோத்கரைச் சந்திக்கவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பிரெக்ஸிற் ஒப்பந்தம், இச்சந்திப்பில் பிரதான பேசுபொருளாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, வடக்கு அயர்லாந்துக்கு இவ்வார இறுதியில் செல்வதற்கு அமெரிக்க சபாநாயகர் எதிர்பார்த்துள்ளார்.
அயர்லாந்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகளை இவ்விஜயத்தின்போது சந்தித்து, பிரெக்ஸிற்றின் பின்னர் அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவின் நிலைகுறித்து கேட்டறியவுள்ளதாக, அயர்லாந்து விஜயத்திற்கு முன்னர் அமெரிக்க சபாநாயகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். அத்தோடு, அங்கு வாழும் மக்களின் வளமான, அமைதியான எதிர்காலத்திற்கு அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவும் அயர்லாந்தும் அமெரிக்காவுடன் ஆழமான மற்றும் விசேட பிணைப்பை கொண்டுள்ளதாகவும் அமெரிக்க சபாநாயகர் கூறியுள்ளார்