(எஸ்.எம்.எம்.முர்ஷித்.)
ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச மக்களாளின் பொழுது போக்கு இடங்களில் ஒன்றாக திகழும் ஏறாவூர் சவுக்கடி கடற்கரைப் பகுதி இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் முயற்சியல் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஆகியவற்றின் பங்களிப்புடன் ஓய்வு கூடங்கள், சிறுவர் விளையாட்டு தளம் என ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. வரும் நிலையில்,
இப்பகுதியை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அது தொடர்பான சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சின் பணிப்பாளர் திருமதி. உமா நிரஞ்சன், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் நாகமணி கதிரவேல், ஏறாவூர் நகர சபை உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான எஸ்.நழீம், ஏறாவூர் பற்று பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பகுதியில் வாகன தரிப்பிடத்துடன் கூடிய பூங்கா, ஓய்வு கூடம், பல்தேவை கட்டடம், மற்றும் விற்பனை கூடம் என்பவை இராஜாங்க அமைச்சரின் முயற்சியில் சுற்றுலாத்துறை அமைச்சினால் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.