(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
நாட்டிற்காக ஒன்றிணைவோம் - ஜனாதிபதி செயலக விசேட செயற்திட்டத்திற்கு அமைவாக ஏறாவூரில் உள்ள முச்சக்கரவண்டிகளுக்கு விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் செயற்திட்டம் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் ஏறாவூர் மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் இன்று (11.04.2019) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.உதயகுமார் , ஏறாவூர் நகர சபை தவிசாளர் ஐ.ஏ.வாஸித், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் வீ.யூசுப், ஜனாதிபதி செயலக அதிகாரிகள் ,நகர சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.ரியாழ், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நளீன் ஜயசுந்தர உட்பட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.