குதலுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்தின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய இரங்கலையும் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டு தாக்குதலில் 185 பேர் உயிரிழந்துள்ளடதுடன் 400 மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.