வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மேல் மாகாணம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலேயே நாளை(செவ்வாய்கிழமை) இவ்வாறு உஷ்ணமான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
உஷ்ணமான காலநிலை நிலவும் சந்தரப்பங்களில் நிழலான இடங்களில் நடமாடுமாறும் அதிக நீர் பருகுமாறும் அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வவுனியாவில் 38.1 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.