ஹற்றன், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரின் விகாரைக்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதிகளில் தாழிறக்கம் ஏற்பட்டதில் அப்பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.நோர்வூட் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் மழை காரணமாகவே இந்த தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு அறைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்தோடு சுவர்களும் இடிந்து வீழ்ந்துள்ளன.
இதில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இப்பிரதேச கிராம சேவகர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





