அரசாங்கத்தினால் கம்பரலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள மீள்குடியேற்ற கிராமமான வாகனேரி கிராமத்தில் இரண்டு மில்லியன் ரூபா நிதியில் இரண்டு வீதிகளுக்கான அடிக்கல் நாட்டும் வேலைகள் இன்று (20.04.2019) சனிக்கிழமை இடம் பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் உள்ள வாகனேரி அமைதி வீதி மற்றும் வாகனேரி 03ம் குறுக்கு வீதிகளுக்கு தலா ஒரு வீதிக்கு ஒரு மில்லியன் ரூபா வீதம் இரண்டு வீதிகளும் கொங்ரிட் வீதிகளாக அமைப்பதற்கு இரண்டு மில்லியன் ரூபா நிதிஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.
வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கே.காசிநாதன் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, சபை உறுப்பினர்களான ரீ.கிரபா மற்றும் வை.யோகேஸ்வரன் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.றிஸ்மின் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.