தன் மீது கொண்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே சிலர் என் மீதும் பிரதேச சபைக்கு எதிராகவும் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்துகின்றனர். தான் இறைவனுக்கு பயந்தே தனக்கு வழங்கப்பட்ட தவிசாளர் பதவியை செய்து வருகின்றேன் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தெரிவித்தார்.
கடந்த 17.04.2019ம் திகதி (புதன்கிழமை) மீராவோடை வாராந்த சந்தையானது தொடர்ந்து நடாத்துவதற்கு அனுமதி கோரி ஓட்டமாவடி பிரதேச சபைக்கு எதிராக மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயல் மற்றும் வர்த்தகர்கள், பொதுமக்கள் இணைந்து நடாத்திய கவdயீர்ப்பு போராட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஜ.ரி. அஸ்மி தலைமையில் வியாழக்கிழமை இரவு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது
இதன் போது கருத்து தெரிவித்த போதே தவிசாளர் மேற்fz;lthWவாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
ஓட்டமாவடி மற்றும் மீராவோடை வர்த்தகர்களுக்கிடையில் வியாபார நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை சுமுகமாக தீர்க்கும் முகமாகவே தாம் நீதிமன்றம் செல்லக் கூடிய துர்ப்பாக்கிய நிலமை பிரதேச சபைக்கு ஏற்பட்டுதாகவும் இரு தரப்பினரின் பிரச்சினை தீர்க்கும் முகமாக பலமுறை அழைத்து கல்குடா உலமா சபையின் முன்னிலையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு பலமுறை தீர்வு எட்டப்பட்ட நிலையில் அதனை மீராவோடை வாராந்த சந்தை சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோர் மீறியதினாலயே நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினருக்கும் ஓட்டமாவடி வர்த்தகர்களுக்கும் இடையில் கல்குடா உலமா சபையும் பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாதத்த்தில் வரும் முதலாம் வாரம் மற்றும் மூன்றாம் வாரங்களில் மீறாவோடையில் சந்தையை நடாத்துவதாக எட்டப்பட்ட தீர்மானத்தினை ஏற்றுக்கொண்டு விட்டு பின்னர் அதற்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே சபையானது இவ்விடயம் தொடர்பாக நல்லதொரு தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக நீதிமன்றத்தினை நாடியது.
நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பிற்கு சபை கட்டுப்பட்டு நடக்கும் என்று இவ்விடத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் எனது பழக்கம் இல்லை. இவ்விடயத்தில் ஊர் சம்பந்தப்பட்ட பிரதேச வேறுபாடு மற்றும் வீன் குழப்ப நிலமைகள் ஏற்படக் கூடாதென்ற இதய சுத்தியுடனே தாம் செயற்பட்டு வருவதாக தவிசாளர் மேலும் தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கல்குடா உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில், ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யூ.எல்.அஹமட், உறுப்பினர் ஏ.ஜி.அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.