(பி.எம்.எம்.ஏ.காதர்;)
சவூதி அரேபியா ஜித்தாவில் வெள்ளிக்கிழமை(19-04-2019)இடம்பெற்ற வாகன விபத்தில் மருதமுனையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான உவைஸ் முகம்மட் றிஹாஸ்(வயது 34)விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
.
இவருடன் பயணித்த மருதமுனையைச் சேர்ந்த பரீட் முகம்மட் சியாத்(வயது 36),றபீக் முகம்மட் றிகாஸ் ஆகியோர் ஆப்தான நிலையில் ஜித்தா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் உணவுப் பொருட்கள் வாங்கச் சென்ற போது பின்னால் வந்த வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயிரிழந்த உவைஸ் முகம்மட் றிஹாஸின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(22-04-2019)மாலை ஜித்தாவில் இடம்பெற்றது.