தேர்தல் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவும், தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, தனது மனைவியுடன் சென்று இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்களித்துள்ளார்.
அகமதாபாத்திலுள்ள நரன்பூரா துணை மண்டல அலுவலக வாக்குச்சாவடியிலேயே அமித்ஷா, தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
குறித்த மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் வாக்களித்துள்ள நிலையில் அமித்ஷாவும், தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார்.
குஜாரத்திலுள்ள 26 தொகுதிகளுக்கும் கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுகள் தற்போது இடம்பெறுகின்றன.
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு இதுவரை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.