அந்த கடிதத்தில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை இம்மாதம் 14ஆம் திகதிக்குள் வழங்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கால அவகாசம் விதித்துள்ளனர்.
ஜெட் ஏயார்வேய்ஸ் நிர்வாகிகள் இன்று (புதன்கிழமை) மும்பையில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையின்போது நிறுவனம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளில் தற்போதைய நிலை மற்றும் புதிய தலைவர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏயார்வேய்ஸ் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. வாங்கிய கடன்களையும் கொடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றது. இதுபோன்ற காரணங்களால் ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்க முடியவில்லை.
இதனால் கடும் அதிருப்தியடைந்த விமானிகள் மற்றும் ஊழியர்கள், சம்பள நிலுவையை வழங்கக்கோரி இம்மாதம் 1ஆம் திகதி முதல் விமானங்களை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் கடந்த டிசம்பர் மாத சம்பளம் மட்டும் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை இம்மாதம் 15ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.