அம்மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களில் தலையிடவும், கோப்புக்களை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என உத்தரவிட்ட நீதிமன்றம் மத்திய அரசின் அறிவிப்பினையும் இரத்து செய்துள்ளது.
புதுச்சேரி அரசின் ஆவணங்களை பெற அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை இரத்து செய்யகோரி அமைச்சர் லட்சுமி நாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.