போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அ.தி.மு.க சார்பில் ரூபாய் 15 இலட்சம் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில், “மறைந்த தமிழக முதல்வர் ஜெயலிதா விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பல்வேறு வகைகளில் உதவிகளைச் செய்துள்ளார். அந்தவகையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அ.தி.மு.க. சார்பில் தடகளப்போட்டியில் தங்கம் பதக்கம் வென்றுள்ள கோமதி மாரிமுத்துவுக்கு 15 இலட்சம் ரூபாயும், வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள ஆரோக்கிய ராஜீவுக்கு ரூபாய் 10 இலட்சம் பரிசுதொகையும் வழங்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த போட்டியில் வெற்றிபெற்ற கோமதி மாரிமுத்துவுக்கு தி.மு.க சார்பில் 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.