எட்டோபாகோக் வீட்டில் இடம்பெற களியாட்ட நிகழ்வில் ஆண் ஒருவர் படுகாயமடைந்ததை அடுத்து இரண்டு பேரையும் அவர்கள் வைத்திருந்த இரு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வீட்டில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் நேற்று (சனிக்கிழமை) இருவரை கைது செய்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து இரண்டு ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





