காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட மாயையை ஏற்படுத்தும் ஒன்று எனவும் அந்த தேர்தல் அறிக்கையில் உள்ளவை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிமொழிகள் இல்லாதவை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே பா.ஜ.க.வின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களால் நிதானத்தை இழந்துவிடமாட்டோம் என்பதுடன் பா.ஜ.க.வுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து லக்னோவில் இன்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்த சாத்தியங்கள் இருக்கிறதா? ஏற்கனவே அந்த கட்சி ஏராளமான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்து அதை நிறைவேற்றவில்லை. அப்படி இருக்கும்போது நேற்று வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகைப்படுத்தப்பட்ட மாயைத் தோற்றம் கொண்டதாகவே உள்ளது.
காங்கிரஸ் ஒருபோதும் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாது. மக்கள் இக்கட்சியை இனிமேலும் நம்பவேண்டாம். வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாத காரணத்தாலேயே மக்கள் அந்த கட்சியை நம்ப மறுக்கிறார்கள். இந்த விடயத்தில் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வேறுபாடு ஏதும் இல்லை.
மாநிலத்தில் எமது கூட்டணியைப் பார்த்து பா.ஜ.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால்தான் எங்கள் கூட்டணியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால், இதுபோன்ற ஆத்திரமூட்டும் பேச்சுகளால் நிதானத்தை நாங்கள் இழந்துவிடமாட்டோம். இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.