அருணாச்சலப் பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சி கடந்த 2004ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், 2009ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வசதி கிடைக்க உறுதி செய்வோம் என்று தெரிவித்திருந்தது. ஆனால், 2014ஆம் ஆண்டுவரை 18 ஆயிரம் வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின்னர் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு என்பது சாத்தியமானது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முழுவதும் பொய்களே உள்ளன. இது தேர்தல் அறிக்கை அல்ல. மக்களை ஏமாற்ற காங்கிரஸ் கட்சி போடும் கபட நாடகம்.
விவசாயிகளை கடன் தள்ளுபடி என்கிற பெயரில் அவர்களை முட்டாளாக்குகிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக பா.ஜ.க. துணை இருக்கும்.
விவசாயிகளை ஏமாற்றும் பாவத்தை ஒருபோதும் நாங்கள் செய்யமாட்டோம். விவசாயிகளுக்கு நல்ல புதிய திட்டங்களை நாங்கள்தான் ஏற்படுத்தி இருக்கிறோம். வரும் மக்களவைத் தேர்தல் சதிகளுக்கு இடையே நடக்கும் தேர்தலாகும்” என்று மோடி மேலும் தெரிவித்தார்.
