தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கின்றது.
இத்திரைப்படத்தில் ஆபாசகாட்சிகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டியுள்ளனர்.
அந்தவகையில், திருநங்கைகள் குழந்தைகளை கடத்துவதுபோல் நடிகர் விஜய் சேதுபதி பேசும் வசனம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
திருநங்கைகள் எப்போது குழந்தைகளை கடத்தினார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கதையை கேட்டதும் விஜய் சேதுபதி அதில் நடிக்காமல் புறக்கணித்திருக்க வேண்டும் என திருநங்கைகள் குறிப்பிட்டுள்ளனர். திருநங்கைகளை அவமதிக்கும் காட்சியில் நடித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அவர்கள் கூறியுள்ளனர்.
அதேநேரம், திருநங்கை சமூகத்துக்கு இத்திரைப்படம் அநீதி இழைத்துள்ளது என தெரிவித்து நடிகர் விஜய் சேதுபதியை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.