கரகாஸில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், எதிர்கட்சி தலைவரான ஜுவான் கொய்டோ அரசியலமைப்பு விதிகளை மீறி இடைக்கால ஜனாதிபதியாக தன்னை பிரகடனம் செய்து கொண்டது குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் முடிவில், சட்டமன்ற உறுப்பினருக்கான பாதுகாப்பை நீக்கி, அவர் மீது நீதி விசாரணை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ஜுவான் கொய்டோ நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ, அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகள் அங்கீகரித்த சட்டமன்ற உறுப்பினர் என்பதால் அவர் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து பதிலளிக்கவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜுவான் கொய்டோ, சட்டமன்ற உறுப்பினருக்கான தனது பாதுகாப்பை நாடாளுமன்றத்தால் நீக்க முடியாது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.