இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் இன்றைய தினம்(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்ட நிலையில், அரச ஊழியர்களுக்கான சம்பளத்தினை வழங்க முடியாமல் போனதாக கூறப்பட்டமை உண்மைக்கு புறம்பானது.
இந்த ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அரச பணியாளர்களுக்கான சம்பளத்தினை வழங்குவதில் சிக்கல் இருக்காது’ என தெரிவித்துள்ளார்.