LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, April 13, 2019

‘வானம் கொட்டட்டும்’ புதிய திரைப்படத்தின் அறிவிப்பு

மணிரத்னம் தயாரிப்பில் நடிகர் விக்ரம்பிரபு, மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்தின்
அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் தனா இயக்கத்தில் ‘வானம் கொட்டட்டும்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டோக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் 19 ஆவது திரைப்படமாகும்.

முதன்முறையாக மணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை வசனத்தை மணிரத்னமும் தனாவும் இணைந்து எழுதி வருகின்றார்கள்.

மணிரத்னத்தின் உதவியாளரான தனா ஏற்கனவே ‘படை வீரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அனைவராலும் பாராட்டு பெற்ற இவர் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

’96’ திரைப்படத்தின் புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்கின்றார். பிரீத்தா ஒளிப்பதிவு செய்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7