(திங்கட்கிழமை) காலை விசேட அதிரடிப்படையினா் மற்றும் இராணுவம், பொலிஸார் இணைந்து கூட்டு சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனையில் இராணுவம் பயன்படுத்தும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்த பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவம் அங்கு சோதனையிட்டனர்.
இதன்போது இராணுவம் பயன்படுத்தும் உடற்கவசம் மற்றும் கொமாண்டோ படைப்பிரிவினர் பயன்படுத்தும் நீர் பை மற்றும் T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 2 மற்றும் பட்டாசுகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடா்ந்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.