இவர்கள், கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தேயிலை மரத்தில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட 36 பேரும் கொட்டகலை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.