சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த டோமா பகுதியில் கடந்த வருடம் ஏப்ரல் 7ஆம் திகதி இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கான தடயங்களும் கண்டறியப்பட்ட நிலையில் தாக்குதலை watch dog விசாரணைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டவுமா பகுதியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இரசாயன ஆயுதத் தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிரியா ஜனாதிபதி ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
சிரிய ஜனாதிபதி ஆசாத்துக்கும், ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் போர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுவதால் அவர்களில் கட்டுப்பாட்டில் இருந்து இதுவரை 40 ஆயிரம் சிவிலியன்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 3 மாதங்களில் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இவர்களில் இறுதி கட்ட மக்கள் தொகுதியினர் நேற்று(வெள்ளிக்கிழமை) அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
