துருக்கியின் மேற்கு மாகாணமான டெனிஸ்லியில் இன்று (புதன்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்கள் மற்றும் சில வீதிகள் சேதமடைந்ததுள்ளதாக துருக்கியின் இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இச்சம்பவத்தில் 20 கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நிலநடுக்கம் ஆரம்பத்தில் 5.7 ரிக்டர் ஆக இருந்ததுடன், பின்னர் 6.4 ரிக்டர் ஆக அதிகரித்திருந்ததாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.





