கெப் ரக வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






