நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்தச்சட்டம் குறித்து ஊடகங்களுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அதிகாரத்தை பகிர்ந்து தீர்வுகள் குறித்து திருத்தங்கள் கொண்டுவந்தால் அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இது சரியான தருணமல்ல.
ஜனாதிபதித் தேர்தலுக்கான சூழ்நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பது ஏற்புடையதல்ல. ஆனால் தற்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமை எனும் விடயம் ஒரு சிலரது தனிப்பட்ட தேவைக்காக மட்டுமே கையாளப்படுகின்றது.
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு அரசியல் முரண்பாடுகளுக்கு தீர்வை அடைய நினைத்தால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராகவே இருக்கின்றோம்” என ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
