அதன்படி மொன்ட்றியல் நகரில் வேக வரம்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரின் பிரதான வீதிகளில் மணிக்கு 40 கிலோமீற்றர் மற்றும் குடியிருப்பு வீதிகளில் மணிக்கு 30 கிலோமீற்றர் என்ற அடிப்படையில் வேகக் கட்டுப்பாடு போடப்படவுள்ளது.
மூன்று ஆண்டுகளில் விபத்துகளை பூஜ்யமாக்கும் நோக்கும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நகர்ப்புற திட்டமிடலுக்கு பொறுப்பான நிறைவேற்று குழு உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
விபத்துகளை குறைக்கும் புதிய திட்டத்தின் கீழ் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன் ஒரு அங்கமாகவே இந்த வேகக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






