அமெரிக்க பிரஜையான கெய்ட்லன் கொல்மன் (33 – வயது) பாலியல் துன்புறுத்தல் காரணமாக தனது கணவனுடனான உறவை கடந்த 2017 ஆம் ஆண்டு முறித்துக் கொண்டார்.
இந்த சம்பவத்தை அடுத்து கெய்ட்லனுடன், மீண்டும் கனடாவுக்கு திரும்பி பின்னர் இரண்டு மாதங்களில் 35 வயதான ஜோசுவா போயல் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது பாலியல் துன்புறுத்தல், பொலிஸாருக்கு தவறாக தகவல்களை வழங்கியமை மற்றும் மரண அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தனது குடும்பம் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தனது கணவர் தன்னை துன்புறுத்தியதாக முன்னாள் பணயக் கைதியான கெய்ட்லன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
போயலும், கோல்மனும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் புரிந்த நிலையில். அதற்கு அடுத்த வருடம் விடுமுறை சுற்றுலா ஒன்றுக்காக ஆப்கானிஸ்தானுக்கு சென்றிருந்தனர். அந்த தருணத்தில் தாலிபான்களால் கடத்தப்பட்டு அவர்களின் ஆதரவுடன் இயங்கும் ஹக்கானி குழுவிடம் பணயக் கைதிகளாக ஒப்படைக்கப்பட்டனர்.






