இந்த அமைப்பு தற்போது 120 நாடுகளை உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிமை பெறுவதற்கான நடைமுறை திகதி அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு பின்னர், எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி குறித்த நெறிமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்றிலிருந்து கனடாவின் வர்த்தக குறியீட்டு உரிமையாளர்கள் மெட்ரிட் அமைப்பு முறையை பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.
இதனூடாக, 120 நாடுகளின் எல்லைகளுக்குள் ஒற்றை சர்வதேச விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஒரே கட்டண செலுத்துகையின் ஊடாக தங்களின் வர்த்தக குறியீடுகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மறுபுறம், ஏனைய நாடுகளில் இருந்து சர்வதேச வர்த்தக குறியீட்டுக்காக விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் இப்பொழுது கனடாவை நியமிக்க முடியும், இது அதிகாரத்துவம் மற்றும் செலவுகளைக் குறைக்க உதவுகின்றது.






