
புதிய அரசியலமை
ப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் இன்று (வியாழக்கிழமை) முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
இதன் போதே அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு, டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன, சுமந்திரன், சரத் அமுனுகம அடங்கிய நால்வர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என ஆதவன் செய்தி சேவைக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வார சந்திப்பிற்கு முன்னர் அவற்றை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பட்டியலிட்டு வழங்கும் பொறுப்பு அந்த குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி செயலகத்தில் அரசியல் தலைவர்கள்!
புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதம் சற்று முன்னர் ஜனாதிபதியின் செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த விவாதத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் விவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
