எத்தியோப்பிய விமான விபத்தில் காணாமல் போனோரைத் தேடுதல் மற்றும் அடையாளம் காணுதலில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் டி.என்.ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளவுள்ளதாக என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.எத்தியோப்பாவின் அனைத்து போக்குவரத்து துறைக்கும் பொறுப்பான அமைச்சர் Dagmawit Moges நேற்று (சனிக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை பிரான்சுக்கு அனுப்பப்பட்டுள்ள எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப்பெட்டி இன்று ஆய்வுக்குள்ளாவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
எத்தியோப்பிய விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெறுகின்ற போதும் காணாமல் போனோரைக் கண்டு பிடிப்பதில் பெரும் சவால் நிலவுகின்றது. இதனால் தமது உறவுகளை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும் என உறவினர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். இந்நிலையிலேயே மரபணு பரிசோதனை மேற்கொள்ளும் யோசனையை அமைச்சர் கூறியுள்ளார்.
எத்தியோப்பிய போயிங் ரக விமானம், பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே தலைநகர் அடிஸ் அபாபாவில் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் விமானத்துக்கான காரணத்தை குறுகிய காலத்தில் கண்டறிவது சாத்தியமில்லை என விமான நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தோனேஷியாவில் கடந்த வருடம் விபத்துக்குள்ளான போயிங் ரக விமானமும் பயணம் ஆரம்பித்த சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இரு விமானங்களும் இவ்வாறு சொற்ப நேரத்துக்குள் விபத்துக்குள்ளாகியிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தது





